27.6 C
Jaffna
April 5, 2025
Pagetamil
கிழக்கு

வியாழேந்திரன் தரப்பு உள்ளிட்ட 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுழுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 22 கட்சிகள் 27 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று (11) வெள்ளிக்கிழமை தேர்தல் வேட்புமனு தொடர்பாக இடம் பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும்.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை பாரம் எடுக்கப்பட்டது. இதில் 23 கட்சிகள் 33 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவற்றில் 1 கட்சி 6 சுயேச்சைக்குளு உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.

ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் ச.வியாழேந்திரன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆவணங்களுடன் சத்தியக்கடதாசியை இணைக்காததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தேரந்தெடுப்பதற்கு 16 கட்சிகளும் 22 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 304 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

AI மூலம் யுவதிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய இளைஞன் கைது!

Pagetamil

இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை

Pagetamil

நிலாவெளியில் பொலிசாருடன் கயிறு இழுத்த இளைஞர்கள்… 10 பேருக்கு வலைவீச்சு!

Pagetamil

தென்கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம்

Pagetamil

உழவு இயந்திர சாரதியாக ஆசைப்பட்ட 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!