யாழ்ப்பாணம் – வல்வை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனம் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பழைய இரும்பு சேகரிக்கும் இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பட்டா வாகனத்தில் வேகமாக வந்துள்ளனர். பாலத்தின் அருகில் பிரேக் பிடித்த போது, வழுக்கிச் சென்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இதேவேளை முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் 21 வயதான பட்டா வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.
உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.