எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் காலப்பகுதி இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் 17 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 20 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளதாக திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
நிலையில் அவற்றில் 3 அரசியல் கட்சிகளதும் 3 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதா தெரிவித்த மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சாமிந்த ஹெட்டியாரச்சி,
இவ்வாறு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நியமணப்பத்திரம் சரியாக வழங்கப்படாமைக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் சத்தியக்கடதாசி வழங்கப்படாமைக்காக அகில இலங்கை தமிழர் மகாசபை மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திரக் கூட்டணி ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளது வேட்பு மனுக்களும் அதனுடன் மூன்று சுயேட்சைக் குழுக்களது வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கம் தருகையில் திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.