Pagetamil
இலங்கை

சஜித்திற்கு உயிரச்சுறுத்தல் இல்லாததால் மேலதிக பாதுகாப்பு நீக்கம்!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திரும்பப் பெறப்பட்டதாக சஜித் தெரிவித்திருந்தது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தல்துவ தெரிவித்துள்ளார். ஆனால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரமே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், போதியளவு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!