சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நேற்று (07) பிற்பகல் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பிற்பகல் 3.30 முதல் 4.00 மணிக்குள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமி கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் கொள்ளுப்பிட்டியை சேர்ந்த 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிவில் உடையில் தாமரை கோபுரத்திற்கு தனியாக வந்த சிறுமி, தனது பை மற்றும் காலணிகளை கண்காணிப்பு தளத்தில் வைத்து விட்டு 29வது மாடியில் இருந்து குதித்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது. மேலும், அவரது பள்ளி சீருடை மற்றும் அப்போது அணைக்கப்பட்டிருந்த செல்போன் ஆகியவை அவரது பையில் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மூன்றாவது மாடியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அப்பகுதி பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன், பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.