Pagetamil
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை எதிர்ப்பதற்கு அனுர அரசும் தீர்மானம்!

நாளை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மான வரைபுக்கு இலங்கை தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் வரைவு தீர்மானத்தின் 51/1 தீர்மானத்தை கடுமையாக எதிர்ப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும், வெளி சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் அதிகாரத்தை நீட்டிக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாது எனவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர் தெரிவித்தார். .

மேற்படி பிரேரணை நிராகரிக்கப்பட்ட போதிலும், உள்ளுர் நடைமுறைகளின் ஊடாக நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை உறுதியாக நம்புவதாக அமைச்சர் கூறினார்.

“மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய அரசாங்கம் புதிய நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் எங்களது தேர்தல் அறிக்கையில் புதிய செயல்களை முன்மொழிந்துள்ளோம். இந்த விவகாரம் குறித்து மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளிப்போம்,” என்றார்.

“மனித உரிமைகள் பேரவை மற்றும் வழக்கமான மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் இலங்கை தொடர்ந்து கூட்டுறவு மற்றும் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடும்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!