Pagetamil
இலங்கை

சிஐடிக்கு முதல் பெண் பணிப்பாளர்?

இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் சிரேஷ்ட அத்தியட்சகர் இமேஷா முத்துமாலவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் 2007 ஆம் ஆண்டு உதவி அத்தியட்சகர்களாக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட முதல் மூன்று பெண் உதவி அத்தியட்சகர்களில் இமேஷா முத்துமாலவும் ஒருவர். 2017 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றார்.

அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளங்கலை (BSc) மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலை (LLB) பட்டம் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்

யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

இலங்கையின் ஒற்றைக்கண் சிறுத்தையின் புகைப்படத்தை மோடிக்கு பரிசளித்த சஜித்!

Pagetamil

மோடியின் இலங்கை வருகை: புதிய காட்சிகளும் கவனிக்க வேண்டிய யதார்த்தங்களும்

Pagetamil

குனிந்து காட்டிய அநாகரிகம்… வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றுங்கள்: ஜனாதிபதிக்கு கடிதம்!

Pagetamil

அனுர, மோடி திறந்து வைத்த திட்டங்கள்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!