பாதுகாப்பு அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
“அனைத்து உரிமம் வைத்திருப்பவர்களும் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில் உள்ள அரசாங்கத்தின் வணிக வெடிபொருட்கள் சேமிப்பு மையத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என்று பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.