26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

அனுரவின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்கு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் அனுர வெற்றி பெற்ற பின்னர் நாட்டுக்கு விஜயம் செய்த முதல் உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகர் ஜெய்சங்கர் ஆவார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில், இந்தியாவின் அண்டை நாடு முதல் கொள்கை கண்ணோட்டத்திற்கு ஏற்ப, பரஸ்பர நன்மைக்காக நீண்டகால கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை ஜெய்சங்கரின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த விஜயத்தின் போது, ​​இலங்கையில் இந்திய நிதியுதவி திட்டங்கள் மற்றும் அதன் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் ஜெய்சங்கர் விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அனுரவை  இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுப்பார்.

இலங்கை ஜனாதிபதிகளாக பதவியேற்பவர்கள் இந்தியாவுக்கு முதல் விஜயத்தை செய்யும் வழக்கத்தை அனுரகுமார திஸாநாயக்கவும் தொடர்வார்.

திகதிகள் இன்னும் இறுதி செய்யப்படாத போதிலும், ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே இருக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மோப்ப நாய்களுடன் கிளிநொச்சிப் பொலிசார் வீதிச் சோதனை

Pagetamil

வேலணை மக்களுக்கு அதிர்ச்சிச் செய்தி: 24 மணித்தியால மருத்துவ சேவை தடைப்படும் அபாயம்!

Pagetamil

ஐயப்பன் பக்தர்களுடன் பிரதமர் ஹரிணியை சந்தித்தார் செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

Leave a Comment