க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2023) இன் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.
பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் நாளை (1) முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
387,648 பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட சுமார் 452,979 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இதில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவி ஒருவரும், இரண்டாவது இடத்தை இரண்டு மாணவிகளும், மூன்றாவது இடத்தை மூன்று மாணவிகளும் பெற்றனர்.
பரீட்சையில் காலி சங்கமித்த பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த ஹிருணி மல்ஷா குமாரதுங்க அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இரண்டாவது அதிகூடிய புள்ளிகளை கொழும்பு மியூசியஸ் கல்லூரியின் குலானி மெத்சரா, குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரியின் விமன்சா ஜயனாதி ரத்னவீர ஆகியோர் பெற்றுள்ளனர். கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சேஷானி செஹன்சா ஜயவர்தன, நுகேகொட அனுலா கல்லூரியைச் சேர்ந்த மெதுகி சாமோதி பெரேரா மற்றும் காலி சங்கமித்த பெண்கள் கல்லூரியின் நடுனி பமுதித ரணவக்க ஆகிய மூன்று மாணவிகள் மூன்றாவது அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்தப் பரீட்சைக்கான சான்றிதழை உள்நாட்டிலும் வெளிநாட்டுப் பாவனைக்காகவும் நாளை (1) முதல் ஒன்லைனில் விண்ணப்பிப்பதற்கும் பரீட்சை திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.