Pagetamil
விளையாட்டு

கிளிநொச்சியில் புறக்கணிக்கப்பட்ட வீரன் தேசிய ரீதியில் கலக்கல்

2024 ம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற பல்கலைகழகங்களுக்கு இடையிலான இருவர் பங்குபற்றும் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக்கழக வீரனும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக மாணவனுமாகிய நாகராசா நிசாந்தன் பங்குபற்றிய அணி பல்கலைகழகங்களுக்கிடையிலான தேசிய போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது.

குழுநிலை போட்டியில் மூன்று அணிகளை வீழ்த்தி முதல் நிலை
பிடித்து, காலிறுதி போட்டியில் வயம்ப பல்கலைகழகத்தையும், அரையிறுதி போட்டியில் யாழ்பல்கலைகழகத்தையும் வீழ்த்தி இறுதி போட்டியில் சப்பிரகமுவ பல்கலைகழகத்திடம் 1:1 சமநிலையில் வந்து இறுதி சுற்றில் 14:13 என்ற அடிப்படையில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை பெற்றுகொண்டது.

நாகராசா நிசாந்தன் கிளிநொச்சி மலையாளபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழகத்தின் வீரன். இவர் அங்கம் வகிக்கும் விளையாட்டுக் கழக கடற்கரை கரப்பந்தாட்ட அணி கரைச்சி பிரதேச செயலக பிரிவு, கிளிநொச்சி மாவட்டம், வடக்கு மாகாண மட்டங்களில் மேற்படி போட்டிகளில் பங்குகொண்டு வெற்றியீட்டி இவ்வருடம் யூன் மாதம் நீர்கொழும்பில் இடம்பெற்ற தேசிய போட்டிக்கு செல்லவிருந்த நிலையில் அவர்கள் மாவட்ட மட்டத்தில் உரிய அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படவில்லை.

எனவே ஏன் தேசிய போட்டிக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சிலரிடம் வினவிய போது நீர்கொழும்பில் மூன்று நாட்கள் தங்கயிருக்க வேண்டும் ஒரு நாள் தங்குமிட செலவு 8500 ரூபா தேவைப்படுகிறது. ஆனால் குறித்த நிதி வசதி ஏற்பாடு செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக தேசிய போட்டிக்கு வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வீரர்களை அழைத்துச் செல்லமுடியாதுபோய்விட்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கிளிநொச்சி வீரன் தான் கற்கும் பல்கலைகழக அணியில் விளையாடி பல்கலைகழகளுக்கிடையிலான தேசிய போட்டில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நியூசிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி: இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

Pagetamil

SL vs NZ | இலங்கை 602/5 என டிக்ளேர்: 75 வருடங்களில் அதி விரைவாக 1000 ஓட்டங்கள் கடந்து கமிந்து மென்டிஸ் சாதனை!

Pagetamil

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகசாதனை படைத்த இலங்கை வீரர்!

Pagetamil

சர்வதேச ரி20 ஓய்வு அறிவித்த ஷகிப் அல் ஹசன்: துரத்தும் வழக்கும், டெஸ்ட் போட்டி குறித்த குழப்பமும்!

Pagetamil

ஓகஸ்ட் மாதத்துக்கான ஐசிசி விருது வென்ற இலங்கையர்கள்!

Pagetamil

Leave a Comment