புதிய அரசாங்கத்தின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (24) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண் இவர்.
அதன்படி, 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஒரு பெண் இந்த நாட்டின் பிரதமராகிறார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய 2019 பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியல் உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றம் பிரவேசித்தார்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த காலங்களில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் மகளிர் மன்றத்தில் பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக பணியாற்றினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1