26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
இலங்கை

‘பெரமுன கட்சிக்காரர்கள் என்னிடம் வந்தார்களே தவிர ஆதரவாளர்கள் வரவில்லை’: ரணில் வெதும்பல்!

தாம் நினைத்த அளவு பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெதும்பியுள்ளார்.

கொழும்புபில் தனது அரசியல் காரியாலயத்தில் தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிக்க வந்தார்களே தவிர, அவர்களுடன் மக்கள் வரவில்லை எனத் தோன்றுவதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் அனுரகுமார திஸாநாயக்கவுக்கே வாக்களித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதே பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது நான்கு புதிய முகங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதிய இராணுவத்தளபதி நியமனம்!

Pagetamil

புதிய கடற்படை தளபதி நியமனம்

Pagetamil

யாழில் போராட்டம்

Pagetamil

இணைய மிரட்டல் சம்பவம் இரு மாணவர்கள் கைது

east tamil

“தனியார் வகுப்புகள் இல்லாமல் சிறந்த கல்வி பெற இயலும்” – ஜோசப் ஸ்டாலின் கருத்து

east tamil

Leave a Comment