இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தாங்கள்
தெரிவு செய்யப்பட்டிருப்பதாவது மாற்றத்தை விரும்பும் மக்களிடம் நம்பிக்கை
ஒளியை ஏற்படுத்தியிருக்கிறது எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார்
புதிய ஐனாதிபதிக்கு சமத்துவக் கட்சியின் வாழ்த்துக்களையும்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்-
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில், வரலாற்று வெற்றியொன்றை
தம்வசப்படுத்தி, இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட
சனாதிபதியாக தேர்வாகியிருக்கும் தங்களுக்கு, சமத்துவ கட்சியின் சார்பில்
வாழ்த்துக்கள் . அரசியல் மாற்றம் ஒன்றை வேண்டி பல்வேறு தசாப்தங்களாக
காத்திருக்கும் இலங்கையர்களுக்கு, தங்களது வருகை, நம்பிக்கையின் ஒளியை
வீசி சென்றிருக்கிறது. ஈழத்திருநாட்டை, இந்து சமுத்திரத்தின் செழுமைமிகு
நாடாக மீளக்கட்டியெழுப்பும் தங்களது முயற்சிகளுக்கு,எமது கட்சியின்
ஆதரவும், ஆசிர்வாதமும் எப்போதும் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.