2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று எண்ணின் முடிவில் 22 மாவட்டங்களில் 15 மாவட்டங்களை அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றார். இறுதி தேர்தல் முடிவு, இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பத்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் திஸாநாயக்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
சஜித் பிரேமதாச நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்தார்.
பிரேமதாச 2019 தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்டங்களே இவை. புதிதாக பதுளை மாவட்டத்திலும் முதலிடம் பிடித்தார்.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற கோட்டாபய ராஜபக்ஷ , 16 மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்தார். அந்த மாவட்டங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றார்.
திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் (42.31%) பெற்று அதிக வாக்குகளைப் பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தினார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னதாக, சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளையும் (32.76%) ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளையும் (17.27%) பெற்றனர்.