லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 66 பேர் காயமுற்றனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் 9 பேர் மோசமான நிலையில் உள்ளனர்.
விளம்பரம்
ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் இப்ராஹிம் அக்கில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இரணுவம் கூறியது. இந்த தாக்குதலில் தமது அமைப்பின் இரண்டாவது மூத்த தளபதி அஹ்மத் மஹ்மூத் வஹ்பியும் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவரும் ஹிஸ்புல்லாவின் ரத்வான் படையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அஹ்மத் மஹ்மூத் வஹ்பி தலைமை தாங்கினார் என்று ஹிஸ்புல்லா கூறியது.
ரத்வான் படைப்பிரிவின் தளபதிகள் சந்திக்கும் இரகசிய தகவல் இஸ்ரேலுக்கு கிடைத்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இலக்குகள் தெளிவானவை என்று பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு ஊடகத்திடம் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாகவே இஸ்ரேல் லெபனானைக் குறிவைத்துத் தாக்கிவருகிறது.
மூன்று நாள்களில் இது மூன்றாவது பெரிய தாக்குதல்.
இஸ்ரேலில் கவனம் காஸாவை விட்டு லெபனான் பக்கம் திரும்பியிருப்பதாக நம்பப்படுகிறது.