முல்லைத்தீவு, விசுவமடு பகுதியில் 14 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் அரச ஊழியர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரான குறித்த அரச ஊழியர், தான் வசிக்கும் வீட்டிற்கு சில வீடுகளுக்கு அப்பால் உள்ள வீட்டில் வசித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிசார் அவரை கைது செய்தனர்.
குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1