ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெறாவிட்டால், நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொள்ளும் போலியான பிரசாரத்துக்கு அநுரகுமார திசாநாயக்க பதிலடி கொடுத்துள்ளார்.
நேற்று நடந்த இறுதி பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய அநுர-
“ரணில் விக்கிரமசிங்க தான் வெற்றிபெறாவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமென்கிறார். அவர் வெற்றி பெறாவிட்டால் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமென்றால், அவர் எரிவாயு நிறுவன உரிமையாளரா? அவர் வெற்றிபெறாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமென்றால், அவர் எரிபொருள் நிறுவன உரிமையாளரைா?
பொருளாதார நெருக்கடியை எப்படி கையாள்வதென்றும், நாட்டை எப்படி ஆள்வதென்றும் எங்களுக்கு தெரியும்.
நாடு பொருளாதார வீழ்ச்சியடைந்ததற்கு ரணிலும் காரணம்“ என சுட்டிக்காட்டினார்.