Pagetamil
முக்கியச் செய்திகள்

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

ஜனாதிபதி வேட்பாளர்களின் அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் முடிவடைந்து நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த மௌன காலம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் சனிக்கிழமை (21) வரை அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மௌனக் காலத்தில், எந்தவொரு பிரச்சாரமும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. சட்டத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள தேர்தல் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பல முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பிரச்சாரக் கூட்டங்கள் நேற்று (18) கொழும்பு மற்றும் வெளியூர் பகுதிகளில் இடம்பெற்றன.

சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இறுதித் தேர்தல் பேரணிகள் மாத்தறை உயன்வத்தை மைதானம், காலி சமனல மைதானம், பொது விளையாட்டரங்கம் களுத்துறை, ஹோமாகம நகரம் மற்றும் கொஸ்கஸ் சந்தி ஆகிய இடங்களில் நேற்று இடம்பெற்றன.

ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று பஞ்சிகாவத்தை டவர் ஹால் தியேட்டருக்கு முன்பாக நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பிச்சார கூட்டங்கள், நுகேகொடை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நேற்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்கில் நடைபெற்றது. சர்வஜன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர நேற்று கொட்டாவ பேருந்து நிலையத்தில் தனது இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் விஷேட பாதுகாப்பும், தேர்தல் பேரணிகள் நடைபெறும் இடங்களில் பொலிஸாரால் விசேட போக்குவரத்துத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

Leave a Comment