கணவனால் இரண்டு கைகளும் வெட்டப்பட்ட நிலையில், மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது மனைவிக்கு வேறொருவருடன் இரகசிய தொடர்பிருப்பதாக சந்தேகத்திலேயே இந்த கொடூரத்தை செய்துள்ளார்.
சந்தேகநபரான கணவர் மலேசியாவிலிருந்து நாடு திரும்பியதாகவும், அவரது கையொன்றும் இறுதி யுத்தத்தில் செல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பிருப்பதாக சந்தேகித்த கணவன், அதை நிறுத்தும்படி மனைவியை தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார்.
எனினும், வீட்டுக்குள் அறைக்கதவின் பின்னால் நின்று வீடியோ அழைப்பில் பேசியதாக குறிப்பிட்டு, இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
மனைவியின் இரண்டு கைகளையும் கணவன் வெட்டியுள்ளார்.
மனைவி உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவரது ஒரு கை துண்டாடப்பட்டுள்ளதுடன், மற்றைய கையும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.