தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) நிராகரித்துள்ளது.
பெல்லன்வில தம்மரதன தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் மற்றும் கொட்டபிட்டிய ராகுல தேரர் ஆகியோர் இந்த மனுக்களை முன்வைத்தனர்.
இந்த இடைக்கால மனு இன்று யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி, இந்த உத்தரவை அறிவித்த நீதிபதி யசந்த கோதாகொட, முதல் பார்வையில் வழக்கு ஒன்றுக்கு ஆதாரம் இல்லாததால், இந்த இடைக்கால மனுவின் உள்ளடக்கங்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.