29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
சினிமா

ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த நானியின் ‘சரிபோதா சனிவாரம்’

நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ தெலுங்கு படம் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இவர் இயக்கியுள்ள படம் ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram). இந்தப் படத்துக்கு தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

வெகுஜன ரசிகர்களுக்கான ‘மாஸ்’ திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்த நிலையில் உலக அளவில் படம் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.90 என கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

‘டிராகன்’ 3 நாள் வசூல் ரூ.50 கோடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Pagetamil

திவ்யபாரதி உடன் டேட்டிங்கா? – ஜி.வி.பிரகாஷ் மறுப்பு

Pagetamil

Leave a Comment