Pagetamil
கிழக்கு

ரணிலின் கூட்டத்துக்கு தோட்டாவுடன் வந்தவர் கைது!

மட்டக்களப்பு கிரான் கோரகல்லிமடுவில் இன்று (8) ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரவிருந்த வேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த ச.இன்பராசா (22) என்ற மீனவத் தொழில் ஈடுபடும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜங்கஅமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கல் பலர் வாகனங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கட்சி ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

குறித்த இளைஞனும் இது போன்று வாகரை பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்.இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எதுவித குழப்பமின்றி சற்று தாமதித்து நடைபெற்றது.

-க.ருத்திரன் –

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தூக்கில் தொங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது!

Pagetamil

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

Leave a Comment