மதுபோதையில் நிர்வாணமாக படுத்திருந்த ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Date:

கடமையின் போது மது போதையில் வீடொன்றின் முன்பகுதியில் நிர்வாணமாக உறங்கிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, புங்குடுதீவு மடத்துவெளியில் அமைந்துள்ள கடற்படை சோதனைச்சாவடியில் மதுபோதையில் இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நின்றிருந்தார். அவரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டு, வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவியது.

அந்த வீடியோவில், பொலிஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் தள்ளாடுவது தெரிந்தது.

பின்னர் இந்த பொலிஸ் உத்தியோகத்தர், புங்குடுதீவில் உள்ள வீடொன்றிற்கு சென்று, வீட்டின் முன்பகுதியில் நிர்வாணமாக தூங்கியுள்ளார்.

தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரை நெருங்கியதும் எழுந்த சந்தேக நபர் தனது சீருடையை விட்டுவிட்டு ஓடியுள்ளார். அவர் தப்பிச் செல்ல முயன்ற போது கம்பி வேலியில் சிக்கி காயம் அடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்