மன்னார் வைத்தியசாலையில் மரணித்த சிந்துஜாவின் கணவர் விபரீத முடிவு!

Date:

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவரான எஸ்.சுதன் (26) அவரது சொந்த ஊரான வவுனியா, பனிக்கர் புளியங்குளத்தில் தவறான முடிவெடுத்து, சனிக்கிழமை (24) இரவு மரணமடைந்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்திருந்தார்.

இந்நிலையில், தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தம்பதிகளுக்கு அண்மையில் பிறந்த குழந்தையின் பராமரிப்பு தொடர்பில் குடும்பத்திற்குள் எழுந்த தகராறை தொடர்ந்து அவர் உயிர்மாய்த்திருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்