25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 30,000 விபச்சாரிகள்!

இலங்கையில் தற்போது 30,000 அடையாளம் காணப்பட்ட விபச்சாரிகள் இருப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ கூறுகிறார்.

மேலும், இந்த நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கை ஆண்கள் இருப்பதாக வைத்தியர் கூறுகிறார்.

2020ஆம் ஆண்டுக்குள் இனங்காணப்பட்ட பால்வினை நோயாளகளின் எண்ணிக்கை அண்ணளவாக ஐந்தாயிரத்தை நெருங்கும் எனத் தெரிவித்தார்.ஆயினும், அண்மைக் காலங்களில் பால்வினை நோய்கள் வேகமாகப் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள வைத்தியர்,  தற்போது 11,500ஐ தாண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிபிலிஸ், கொனோரியா, பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் கொனோரியா அல்லாத பால்வினை நோய்கள் இந்த நாட்டில் மிகவும் பொதுவான பாலியல் மூலம் பரவும் நோய்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் கூறினார்.

தற்போது இலங்கையில் ஏறக்குறைய 5000 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர், கடந்த காலத்தில் கண்டறியப்பட்ட நோயாளிகளின் வீதம் ஏறக்குறைய முந்நூறு வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பால்வினை நோய்கள் பற்றி சமூகத்திற்கு அறிவூட்டல் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களை கிளினிக்குகளுக்கு அனுப்புவதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வைத்தியர் சமல் சஞ்சீவ கூறுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

தாயை மிரட்டி யுவதியை கடத்திய காதலன் கைது

east tamil

Leave a Comment