27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
சினிமா

நடிகை சோபிதா துலிபாலாவை மணக்கிறார் நாக சைதன்யா

பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோபிதா துலிபாலாவை, நடிகர் நாகசைதன்யா மணக்கவிருக்கிறார். இவர்களுக்கு நேற்று ஹைதராபாத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக நடிகர் நாகார்ஜுனா சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தார்.

பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார். நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017இல் திருமணம் செய்து கொண்டனர். 2021இல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதனிடையே, நாக சைதன்யாவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.

இந்நிலையில், பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் நேற்று காலை 9.42 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. சோபிதா துலிபாலா பொன்னியின் செல்வன் உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, “எங்கள் குடும்பத்தில் ஒருவராக இணையும் சோபிதாவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment