வீதியில் பழங்கள் விற்பனை செய்த ஒருவரை பலத்த காயங்களை ஏற்படுத்திய நான்கு அமெரிக்க புல்லி நாய்களின் உரிமையாளரை ஓகஸ்ட் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி நேற்று உத்தரவிட்டார்.
களனியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜயந்த என்ற விற்பனையாளர் களனி கெமுனு மாவத்தைக்கு அருகில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்த போது நாய்களால் தாக்கப்பட்டார்.
இந்த நாய்களின் உரிமையாளர் ஹெட்டியாராச்சிகே சந்தன களனி, பியகம பகுதியைச் சேர்ந்தவர்.
பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது வாடிக்கையாளர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறும் கோரியிருந்தார்.
விற்பனையாளரின் உடல் நிலை காரணமாக தற்போது வாக்குமூலத்தை வழங்க முடியாது எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பாதிக்கப்பட்ட தரப்பினரின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஈடுசெய்வதாக உறுதியளித்தார். எவ்வாறாயினும், வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.