மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர், தீவிர விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை காவலாளியை தாக்கியது, வைத்தியர்கள், தாதியை மிரட்டியது, விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனாவை ஈ.பி.டி.பி கட்சி தீவிரமாக ஆதரித்து செயற்பட்டு வரும் நிலையில், மன்னாரிலுள்ள ஈ.பி.டி.பியினரும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் முன்பாக கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
3
+1
1
+1
+1
2