பொலிஸ் மா அதிபர் தொடர்பிலான பிரச்சினையை சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கலந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (28) அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு தனித்தனியாக தொலைபேசியில் நேற்று காலை அறிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பில் எவ்வாறான பிரச்சினையாக இருந்தாலும் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி இவ்விரு அதிகாரிகளுக்கும் மேலும் அறிவித்துள்ளார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.