26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil
குற்றம்

பல பெண்களுடன் உறவு கொண்டவர் கைது!

பொலிஸ் பரிசோதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், பெண்கள் மற்றும் ஆண்களிடமிருந்து பணம், தங்கம் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்ததுடன், அவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அவரும், அவருக்கு உதவிய முச்சக்கர வண்டி சாரதியும் கெஸ்பேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் பெரும் எண்ணிக்கையானவர்களை மிரட்டி கொள்ளையடித்துள்ளார். அவ்வாறு திருடிய பணத்தை தொலைக்காட்சி நாடக நடிகைகள் உள்ளிட்ட அழகிய யுவதிகளுடன் உல்லாசமாக இருக்க செலவு செய்துள்ளதாகவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளில் சந்தேகநபர் தொலைக்காட்சி நாடக நடிகை மற்றும் பல பெண்களுடன் உடலுறவு கொள்ளும் காட்சிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து போலி பொலிஸ் அடையாள அட்டை, 10200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், தொலைக்காட்சி நடிகை ஒருவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் நான்கு பெண்களின் தேசிய அடையாள அட்டைகள், ஆண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, 18 தொலைபேசி சிம் அட்டைகள் மற்றும் 5 கைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  சந்தேகநபர் பயன்படுத்திய முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியங்க சில்வாவின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி பொலிஸ் அடையாள அட்டையை  சந்தேகநபர் தயாரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

Leave a Comment