ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்ஷ இன்று (28) மீண்டும் சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உருவாக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்ட போதிலும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கான ஒதுக்கீடு தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உள்ளூராட்சிகளுக்கு 30 வீதமும், மாகாண சபைகளுக்கு 35 வீதமும், பாராளுமன்றத்திற்கு 40 வீதமும் இட ஒதுக்கீடு வழங்க ஜனாதிபதி முன்மொழிந்த போதிலும், உள்ளூராட்சிகளுக்கு 90 வீதமும், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கு 70 வீதமும் கோட்டாவை பசில் ராஜபக்ஷ கோரியுள்ளார்.