பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த சந்தேகநபரொருவர் மீது, கடமையில் இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக குறிப்பிட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் மீது தாக்குதல் நடத்தியதாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீளவும் கடமைகளை பொறுப்பேற்க முன்னர், சந்தேகநபரை தாக்கியதாக குறிப்பிட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தரும் மன்றில் முன்னிலையாகினார்.
தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட சந்தேகநபர், விவகாரத்தை சுமுகமாக முடிக்க விரும்புவதாகவும், தான் எதிர்த்து பேசியதால் பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஒரு முறை தாக்கியதாக குறிப்பிட்டார்.
இதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.