கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!

Date:

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 99 ஆம் கொலனி பிரதேசத்தில் வைத்து 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தம்பலகமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தம்பலகமம் பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹைரியா நகர் புல்மோட்டை -1 என்ற இடத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சந்தேகநபர் 500 கிராம் கேரள கஞ்சாவை விற்பனை செய்வதற்காக தம் வசம் வைத்திருந்து விற்பனைக்கு முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக தம்பலகமம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 44 வயதுடைய சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டுதான் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ரவ்பீக் பாயிஸ்-

spot_imgspot_img

More like this
Related

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வெளியேற நீதிமன்றம் உத்தரவு

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்