24.8 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் – முன்னாள் எம்பி சந்திரகுமார்.

குளங்களை ஆக்கிரமித்து அதன் பரப்பளவை குறைத்து வருகின்ற செயற்பாடுகள்
எதிர்காலத்தில் மிகப்பெரும் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச்
செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(27) கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பொது அமைப்புக்கள் மற்றும்
கமக்கார அமைப்புக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக தனி நபர் ஒருவரால் குளம்
ஆக்கிரமிக்கப்படுவதனை நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

தற்போது உலகம் மிகப்பெரும் பருவநிலை மாற்றத்திற்கு முகம் கொடுத்துள்ளது.
நீருக்காக மக்கள் அலைந்து திரிகின்றார்கள், வறட்சி காரணமாக விவசாயிகள்
பாதிக்கப்படுகின்றனர். நிலத்தடி நீர் வேகமாக வற்றிச் செல்கிறது. இவ்வாறான
நிலைமைகளின் காரணமாக மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் எங்கள் மத்தியில் இருக்கின்ற குளங்களையும் நாம் பாதுகாத்து
பேணுவதனை விடுத்து அதனை தனிநபர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவது
என்பது ஒரு ஆபத்தான நிலைமையை உருவாக்கும்.

எமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட குளங்களை பாதுகாக்க வேண்டியது எங்கள்
அனைவரினதும் மிகப்பெரிய பொறுப்பு. முன்னோர்கள் குளங்களை உருவாக்கி அதனை
பாதுகாத்து எங்களிடம் கையளித்ததன் காரணமாகவே நாம் அதன் பயனை அனுபவித்து
வருகின்றோம். எனவே நாமும் இவற்றை அவ்வாறே பாதுகாத்து எதிர்கால
சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர்

10 அடி கொள்ளளவு கொண்ட கனக்காம்பிகை குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான
விவசாயகுடும்பங்கள் உள்ளனர்.அந்த பிரதேசத்தின் நிலத்தடி நீரும் இக்குளம்
காரணமாகவே பாதுகாக்கப்பட்டுவருகிறது எனவே இக்குளத்தினை சட்டவிரோத
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும். குளத்தின்
பின்பகுதியில் சுமார் 20 ஏக்கர் வரையான பரப்பளவு
ஆக்கிரமிக்கப்பட்டுளளது. இது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்டது.தற்போது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர்
பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு அளவில்
குளத்திற்குள் மண் நிரப்பபட்டு வருகிறது. இதனை த்டுத்து குளத்தை
பாதுகாப்ப சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரணைமடுச் சந்தியில் இளம் பெண் கடத்தல்

east tamil

4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணம்!

Pagetamil

மூன்று இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு

east tamil

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

Leave a Comment