நடிகர் பிரசாந்தின் நடிப்பில் உருவாகி திரைக்கு வரவுள்ள ‘அந்தகன்’ திரைப்படத்தின் ‘தி அந்தகன் ஆன்தம்’ பாடலை நடிகர் விஜய் புதன்கிழமை வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். இதில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ‘தி அந்தகன் ஆன்தம்’ (The Andhagan Anthem) பாடலை நடிகர் விஜய் வரும் புதன்கிழமை (ஜூன் 24) வெளியிடுகிறார். இந்தப் பாடலை அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். உமாதேவி, ஏகாதசி பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பிரபு தேவா பாடலை இயக்கியுள்ளார். சாண்டி பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்த்து, விஜய், பிரசாந்த், பிரபு தேவா இணைந்து நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் திகதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
A heartfelt Thank you to our dearest Thalapathy Vijay. I am delighted to share that he will be unveiling the much awaited promotional “The Andhagan Anthem” song on 24.7.24
Mark the date and get ready to groove!
Visualised and Conceived by @PDdancing
Sung by Rockstar… pic.twitter.com/hkr8XxE3AH— Prashanth (@actorprashanth) July 22, 2024