திருமணமாகி தேனிலவைக் கழித்த சகோதரன் மற்றும் மற்றவர்களுடன் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இலக்கம் 64/5, குலரத்ன வீதி, கொடஹேன, அம்பலாங்கொடை, துயலையில் வசித்து வந்த மணீஷா செவ்வந்தி (24) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரரின் திருமண நிகழ்வு ஹிக்கடுவ, பின்னதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்று, தேனிலவை கழிப்பதற்காக கடந்த 18ஆம் திகதி அஹுங்கல்லை ஹோட்டலுக்கு வந்துள்ளார். மறுநாள் 19ம் திகதி காலை ஒன்பது மணியளவில் திருமணம் நடந்த இளைஞனின் தாயும், தங்கை உள்ளிட்ட சிலரும் புதுமண தம்பதிகளிடம் நலம் விசாரிப்பதற்காக விடுதிக்கு வந்தனர்.
அவர்கள் ஹொட்டல் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, மணமகனின் தங்கை நீரில் மூழ்கினார்.
உடனடியாக பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.