திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை 200000 ரூபா பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அலி சப்ரி ரஹீம், கல்பிட்டி பிரதேசத்தில் அரச சார்பற்ற நிறுவனத்துக்குச் சொந்தமான காணியில், மத்ரஸா பாடசாலையொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அத்துமீறி நுழைந்துள்ளதாக, சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனம் கல்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
அலி சப்ரி ரஹீமுக்கு ஜூலை 8ஆம் திகதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அலி சப்ரி ரஹீமை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1