நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் செல்ல அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (17) பிறப்பித்துள்ளது.
கூரகல விகாரை தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு மத நல்லிணக்கத்தை குலைத்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1