வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘விடுதலை 2’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் விஜய் சேதுபதி ஓடி வருவது போன்றும், மற்றொரு போஸ்டரில் விஜய் சேதுபதியும், மஞ்சு வாரியரும் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு போஸ்டர்களிலும் “உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இக்குறளின் பொருள், பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும்.
A new chapter begins with #ViduthalaiPart2. Directed by the visionary #VetriMaaran! 🌟 First Look is Out #ValourAndLove #வீரமும்காதலும்
An @ilaiyaraaja Musical @sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72 #Kishore… pic.twitter.com/c9mTkkpEpP
— VijaySethupathi (@VijaySethuOffl) July 17, 2024