நடிகை வரலட்சுமி சரத்குமாரும், மும்பையை சேர்ந்த நிக்கோலய் சச்தேவ் என்பவரும் காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இவர்கள் திருமணம், கடந்த 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள கிராபியில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
திருமணத்துக்கு பிறகு மணமக்கள் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். அப்போது வரலட்சுமி சரத்குமார் கூறும்போது, “திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் நடிப்பேன். என்னுடைய காதல் நிக்கோலய். ஆனால், என் உயிர் சினிமாதான். அதனால், நடிப்பை தொடர்வேன்” என்றார்.
சரத்குமார் கூறும்போது, “வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்துக்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்” என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1