ஆமெரிக்காவின் பென்சிலேனியாவில்(Pennsylvania) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அமெரிக்க முன்னால் ஜனாதிபதியும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம் மீது, கடந்த சனிக்கிழமை இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இத் தாக்குதலில் டொனால்ட் ரம்ப உயிர் தப்பிய அதே வேளை, அவரது வலது காதில் துப்பாக்கி தோட்டாக்கல் துளைத்திருந்ததில் காயமடைந்தார்.
இத் தாக்குதல் தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் வெளியிட்டிருந்தார். தாக்குதலில பார்வையாளர்களும் காயமடைந்திருந்தனர்.
அத்துடன் இது ஒரு கொலை முயற்சி என, அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந் நிலையில் பொலிஸ் விசரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் 20 வயதான தோமஸ் மேத்யூ க்ரொக் (Thomas Matthew Crooks ) என, ஃபெடரல் பீரோ புலனாய்வு (FBI-Federal Bureau of Investigation) தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக் கொலை முயற்சி தொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, டொனால்ட் ரம்ப தற்பேது சுகமாக உள்ளதாகவும், தெடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்களில் விரைவில் ஈடுபடுவார் என்றும், அவரது கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.