இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் அரசாங்கத்தின் வருமானம் 43.3 வீதத்தால் அதிகரித்துள்ளது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு குறிப்பிட்ட முதல் நான்கு மாதத்திலேயே வருவாய் அதிகரித்துள்ளது என, நிதி அமைச்சு வெளியிட்டுள்ள மத்திய ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமான வரி நடவடிக்கைகள் மற்றும் ஏற்றுமதியை அதிகரித்து வருவாயை அதிகரித்தல், இறக்குமதியை கட்டுப்படுத்தல் போன்ற வினைத்திறனான நிர்வாக செயற்பாடு மூலம் அரசாங்க வருமானத்தை அதிகப்படுத்தி, நாட்டை மீட்டு, முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1