விமானம் ஒன்று மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியதில்,  3 பேர் பலியாகினர்.

Date:

ரஷ்ய பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் ஒன்று மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியதில்,  3 பேர் பலியாகினர்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாஸ்கோ அருகே பறந்து கொண்டிருந்த சுகோய் சூப்பர்ஜெட் விமானம், ரஷ்ய தலைநகருக்கு தென்கிழக்கே 90 கிலோமீட்டர் (55 மைல்) தொலைவில் உள்ள அப்ராக்சினோ கிராமத்திற்கு அருகில் உள்ள காடுகளில் விழுந்ததாக அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதில் இருந்த 3 பேர் இறந்துள்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விமானம் ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ்ப்ரோம் ஏவியா நிறுவனத்திற்கு சொந்தமானது.

மாஸ்கோ விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​புறப்பட்ட எட்டு நிமிடங்களில் பழுது காரணமாக விபத்துக்குள்ளானது.விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் சில ரஷ்ய ஊடக அறிக்கைகள் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் செயலிழந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன.

 

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மேலும் மதிப்பிழந்தது

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும்...

**நெல் கொள்முதல் விலையை உயர்த்த எந்தத் தீர்மானமும் இல்லை**

  நெல் சந்தைப்படுத்தல் சபை (PMB) மூலம் நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்குப்...

இன்றிரவு முதல் பல பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB), படுக்கை, ஹோமாகம, கொட்டாவ,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்