அதுருகிரிய துப்பாக்கி சூடு- சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு தப்பிக்க முயற்சித்துள்ளதாக தகவல்

Date:

அதுருகிரிய பிரதேசத்தை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில், 08 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 55 வயதுடைய பிரபல தொழிலதிபரான கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் 38 வயதுடைய நபரொருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பிரபல பாடகியான கே.சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 சந்தேக நபர்கள் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மன்னாருக்குச் செல்லும் பிரதான பாலத்தடியில் விசேட இராணுவ சோதனைச் சாவடி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக வேறு மாவட்டங்களில் இருந்து மன்னாரிற்குள் நுழைகின்ற சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக நிலைகொண்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக சோதனை சாவடி அமைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்