24.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலை முன் மக்கள் போராட்டம்

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை இடமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிராக தென்மராட்சி மக்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தென்மராட்சி முழுவதும், காலையில் 2 மணித்தியால கதவடைப்பு மேற்கொள்ளப்படுவதுடன், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்பாக மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில்,  பொதுமக்கள் திரண்டதால் அந்த முயற்சி பிசுபிசுத்தது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதத்துடன் சென்ற மாகாண, மாவட்ட சுகாதாரசேவைகள் பணிப்பாளர்கள், இரவு நேரம் வைத்தியசாலைக்கு சென்றதை தொடர்ந்து, இந்த பரப்பு ஏற்பட்டது.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் நேற்று இரவு 8 மணியளவில் குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், பொலிஸ் உயரதிகாரிகளும் அங்கு வந்திருந்தனர்.

அவரை வைத்தியசாலைக்கு வெளியே அழைத்து கைது செய்ய பொலிசார் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்தது. யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டது, ஊடகங்களும் அங்கு குவிந்திருந்ததால் பொலிசாராலும் எல்லை மீறி நடக்க முடியவில்லை. வைத்தியர் சாப்பிடுவதற்காக வெளியே செல்லும் போது, கைது செய்யப்படலாமென்பதால், வைத்தியர் அவரது அறையை விட்டு வெளியே வராமலிருக்குமாறும், சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை தாமே செய்து தருவதாகவும் தென்மராட்சி மக்கள் தெரிவித்து, அதற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

இதேவேளை தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்க முயற்சிக்கப்பட்ட வைத்திய பொறுப்பதிகாரி உள்ளிட்ட வைத்தியர்கள் நள்ளிரவுக்கு பின்னர், வைத்தியசாலையின் பின்கதவினால் நுழைந்தனர்.

இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நேற்று இரவு சுமார் 1500 வரையான மக்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் திரண்டனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்பம், வைத்திய மாபியாவுக்கும், அதற்கு எதிரான வைத்தியரின் போராடத்துக்கும் இடையிலான சிக்கல் என அவர்களில் பெரும்பலானவர்கள் கருதுவது, அவர்களுடன் உரையாடிய போது தெரிவதாக தமிழ்பக்கத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

நாளை புதிய சபா நாயகர் தெரிவு

east tamil

தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் தற்கொலை

east tamil

ஜனாதிபதி அனுரகுமார திசா நாயக்க – இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

east tamil

Leave a Comment