ரி-20 தொடருக்கான இந்திய  குழாமில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

Date:

சிம்பாப்வேக்கு  எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடருக்கான இந்திய  குழாமில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவை (BCCI) தெரிவித்துள்ளது.

அந்தவகையில், வருகின்ற ஆறாம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த போதிலும் அணியில் சஞ்சு சாம்சன்,சிவம் தூபே, ஜெய்ஸ்வால், ஆகியோரும் இடம் பிடித்திருந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த மூன்று வீரர்களையும் இந்திய கிரிக்கெட் பேரவை அதிரடியாக நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கான காரணத்தை தெரிவிக்கையில், “ உலக கோப்பையை வென்ற இந்திய அணி இன்னும் நாடு திரும்பவில்லை.

பார்படாசில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.இதன் காரணமாக அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் பார்படாசில் உள்ள ஹோட்டலில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.

இதனால் இந்த அணியில் இருக்கும் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஜெய்ஸ்வால் ஆகிய வீரர்கள் தற்போது சிம்பாப்வேக்கு வரமுடியாத சூழலில் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இந்தியா, சிம்பாப்வே ஹராரேவில் (Harare) தொடங்கவிருக்கும் இந்த போட்டிகளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் இந்த மூன்று வீரர்களும் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

 

 

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து 4 பேர் தப்பியோட்டம்

பொலன்னருவையில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து இன்று பிற்பகல்...

அண்ணாமலைக்கு சீட் கொடுக்காமல் அதிர்ச்சி – பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி என்ன?

நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. எல்லோரும் கணித்தபடியே...

ஈரான் சுட்டுவிழுத்திய மற்றொரு போர் விமானம்: விமானியை தேடும் ஈரான், அமெரிக்கா!

ஈரானின் ஆயுதப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானத்தின் விமானியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்