25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 68 ரன்களில் வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி இருந்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் சால்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.

அர்ஷ்தீப் வீசிய மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசினார் பட்லர். அடுத்த ஓவரில் அக்சர் படேலை பந்து வீச பணித்தார் ரோகித் சர்மா. அந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த பட்லர், பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று அதனை மிஸ் டைம் செய்தார். அது டாப் எட்ஜ் ஆக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேட்ச் பிடித்தார். பட்லர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்த ஓவரில் 5 ரன்கள் எடுத்த சால்ட்டை போல்ட் செய்தார் பும்ரா. பந்தை ஆஃப் கட்டராக வீசி இருந்தார். அது லெக் ஸ்டம்பை தகர்த்தது. ஆறாவது ஓவரின் முதல் பந்தில் ஜானி பேர்ஸ்டோவை போல்ட் செய்தார் அக்சர். பவர்பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.

மீண்டும் எட்டாவது ஓவரின் முதல் பந்தில் மொயின் அலி விக்கெட்டை வீழ்த்தினார் அக்சர். பந்து எங்கு உள்ளது என அறியாமல் கிரீஸ் லைனை விட்டு வெளியில் வந்த மொயின் அலியை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார் ரிஷப் பந்த். 9-வது ஓவரின் முதல் பந்தில் சாம் கரனை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார் குல்தீப் யாதவ். 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து.

11-வது ஓவரில் ஹாரி ப்ரூக்கை அவுட் செய்தார் குல்தீப். அதற்கடுத்த ஓவரில் கிறிஸ் ஜார்டனை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் குல்தீப். அக்சர் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். லிவிங்ஸ்டன் மற்றும் ரஷித் ரன் அவுட் செய்யப்பட்டனர். ஆர்ச்சர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார்.

16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. இதன் மூலம் சனிக்கிழமை (ஜூன் 29) அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது இந்தியா. அதோடு கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கு தற்போது இந்தியா இந்த வெற்றியின் மூலம் பதிலடி தந்துள்ளது. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அக்சர் படேல் வென்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்பிரிக்க அணி முதலிடம்

Pagetamil

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை இரண்டரை நாட்களில் முடித்த அவுஸ்திரேலியா வெற்றி!

Pagetamil

கஸ் அட்கின்சன் ஹட்ரிக் சாதனை: சரண் அடைந்த நியூஸிலாந்து அணி!

Pagetamil

வினோத் காம்ப்ளிக்கு உதவ முன்வந்த ‘1983 உலகக் கோப்பை’ வெற்றி நாயகர்கள்!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

Leave a Comment