25.9 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இலங்கை

‘தமிழர் தரப்பின் பலவீனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளது’: வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் முன்னிலையில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டது, இலங்கை இந்திய அரசுகளுக்கு சாகமாக மாறியுள்ளது என என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மூன்றாவது முறை பதவி ஏற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயல் உறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஐெயசங்கர் உத்தியோகபூர்வ முதற் பயணமாக இலங்கை வந்துஅனைத்து தரப்புக்களையும் சந்தித்துள்ளார்.

தமிழர் தரப்புடனான சந்திப்பு தமிழ் மக்கள் எதிர் பார்த்தது போன்று ஆரோக்கியமாக அமையவில்லை மாறாக ஐெயசங்கர் உடனான சந்திப்பில் ஒற்றுமையான நிலைப்பாட்டை கூட்டாக ஒரு தீர்மானமாக தெரிவிக்காக தவறியதுடன் ஐெயசங்கர் முன்னிலையில் ஒரே கட்சிக்காரர் முரண்பட்ட கருத்து விவாதத்தில் ஈடுபட்டதுடன் பிரிதொரு கட்சி 13 வது திருத்தம் மற்றும் மாகாணசபைத் தேர்தல் தேவையில்லை என்ற கருத்தையும் தெரிவித்தனர்.

இலங்கையின் சிங்கள ஆட்சியாளரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பல்வேறு வியூகங்களை வகுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு தமிழர் தரப்பின் பலவீனம் வாய்ப்பாகவும் இரண்டாம் தரப்பின் நெருக்கடிகள் இன்றி இலங்கை அரசை நேரடியாக கையாள வழி சமைத்துள்ளது. சம நேரத்தில் இந்திய அரசின் ஆதரவுடன் அழுத்தங்களை எதிர்பார்க்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பின் நெருக்கடிகள் இல்லை என்ற நிலையும் உறுதியாகியுள்ளது.

கடந்தகால தமிழர் தரப்பின் இராஐதந்திர பலவீனத்தை கற்றுக் கொண்ட பாடமாக விளங்கி இலங்கை , இந்திய தரப்புக்களை தந்திரோபாய ரீதியில் கையாள தமிழர் பிரதிநிதிகள் ஒற்றுமையின்மையால் பலவீனப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலை எதிர் காலத்தில் எஞ்சி உள்ள தமிழர் இருப்புக்களை யுத்தம் மற்றும் சத்தமற்ற நிலையில் அழித்துவிடும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சியின் முடிவுகளுக்கு ஏனையவர்கள் ஒத்துவர வேண்டுமென்பது முறையற்றது: செல்வம் எம்.பி

Pagetamil

UPDATE – சல்லி கோவில் ஆக்கிரமிப்பு

east tamil

வவுனியா குள ஆற்றுப்பகுதியில் அரச ஊழியரின் சடலம் மீட்பு

east tamil

திருமலையில் இலக்கிய நிகழ்வு – “மனதில் உறுதி வேண்டும்”

east tamil

காங்கேசன்துறை- நாகை படகுச்சேவை; மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் ஆரம்பம்: வரிச்சலுகையுடனான விற்பனை நிலைய வசதிக்கும் ஏற்பாடு!

Pagetamil

Leave a Comment