யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டார்.
இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று இரவு மது போதையில் வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் குறித்த கொலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்டவர் அடி அடிகாயங்களுடன் சடலமாக. இன்று (20) அதிகாலை மீட்கப்பட்டு அதன் பின்னர் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது.
கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1